கையில் இறைச்சியுடனும் சட்டையில் இரத்தத்துடனும் தெருவில் நிற்கும் சமையல்காரர்கள்: என்ன நடக்கிறது பிரான்சில்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் தெருக்களில் ஆங்காங்கே கையில் இறைச்சியுடனும் சட்டையில் இரத்தத்துடனும் சமையல்காரர்கள் நிற்கத்தொடங்கியிருக்கிறார்கள், இறைச்சி விற்கும் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன, கடைகளில் இரத்தம் போன்ற ஒரு திரவம் வீசப்படுகிறது, என்னதான் நடக்கிறது பிரான்சில்?

பாரம்பரியமாக இறைச்சி உண்ணும் பிரான்சில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் Elisabeth Cureஇன் கடையின் கண்ணாடிகள் கல் வீசித் தாக்கப்பட்டது கடைசியாக இறைச்சிக் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

அதிகாலை மூன்று மணிக்கு சத்தம் கேட்டு விழித்த Elisabeth கடைக்கு வந்து பார்த்தபோது அங்கு ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.

அதில் ’அடக்குமுறையை நிறுத்து’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டதும் Elisabethக்கு தெளிவாக புரிந்து விட்டது யார் தாக்குதல் நடத்தியது என்று.

Elisabeth மட்டுமல்ல, பிரான்சின் பெரும்பான்மையான இறைச்சிக் கடைக்காரர்களும், இறைச்சிக்காக கால்நடைகள் வளர்ப்பவர்களும் பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

யாரைப்பார்த்து தெரியுமா? நாட்டில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கும் ’வேகன்’ என்று அழைக்கப்படும், விலங்குகளிலிருந்து பெறப்படும் பால் முட்டை உட்பட எந்த தயாரிப்பையுமே உண்ணாத ஒரு கூட்டத்தாரைப் பார்த்துத்தான்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 17 இறைச்சிக் கடைகள் நொறுக்கப்பட்டுள்ளன. இருதினங்களுக்குமுன் இறைச்சிக்காக கால்நடைகளைக் கொல்லும் ஒரு கட்டிடம் எரிக்கப்பட்டுள்ளது.

மாமிசம் மற்றும் கால்நடை தயாரிப்புகளை எதிர்க்கும் இந்த கூட்டம்தான் நாட்டின் பல இடங்களில் மாமிசத்துடனும் இரத்தம் படிந்த உடைகளுடனும் தெருவில் நின்று மாமிசம் உண்ணுபவர்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

விலங்குகளைக் கொல்வது ஒரு இனப்படுகொலை, பால் உண்பது கொலைக்கு சமம், என்று குரல் எழுப்புவதோடு இறைச்சிக் கடைகளில் இரத்த போன்ற ஒரு திரவத்தை வீசிச் செல்கிறார்கள்.

இவர்கள் ஏற்படுத்திய பயம் எந்த அளவிற்கு இறைச்சிக் கடைக்காரர்களை பாதித்திருக்கிறது என்பதை, கால்நடை கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டிருப்பதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்