பிரான்ஸில் திரையரங்குக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல்: தெறித்து ஓடிய பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

வடக்கு பிரான்ஸில் உள்ள தொழிற்துறை நகரமான Rennes-ல் திரையரங்கு ஒன்றில் புகுந்த நபர் ஒருவர் திடீரென்று கத்தியால் பொதுமக்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rennes நகரத்தில் செயல்பட்டுவரும் Gaumont திரையரங்கிலேயே உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் மர்ம நபர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்,

வாக்குவாதத்தினிடையே குறித்த நபர் கத்தியால் தாக்கியிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இருவரும் ஆபத்து கட்டத்தில் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்