பாரீசில் சிறுநீர் கழிக்க வேண்டாம்: வைரலான அரசு வெளியிட்டுள்ள வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீசை சுத்தமாக வைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக பாரீஸ் தெருக்களில், பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டாம் எனக்கூறும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

வெளியாகி ஒரு வாரத்திற்குள் 360,000 முறை பார்க்கப்பட்டதோடு இன்னும் வைரலாகவே உள்ளது அந்த வீடியோ.

கருப்பு மஞ்சள் பின்னணியில் மூன்று பாடகர்கள் பாடும் அந்த வீடியோ, பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என வலியுறுத்துகிறது.

பிரெஞ்சு மொழியில் பாடப்படும் அந்தப் பாடலின் வரிகள் ‘இப்போதெல்லாம் வெளியிடங்களில் நான் தென்றலை சுவாசிக்கிறேன், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இப்போதெல்லாம் இங்கு சிறுநீர் நாற்றம் அடிப்பதில்லை.

பாரீசில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதவர்களுக்கு எனது பெரிய மற்றும் மனப்பூர்வமான நன்றி’ என்று கூறுகின்றன.

அதே நேரத்தில் சாலையோரம் அசுத்தம் செய்பவர்களைக் கடிந்து கொள்ளும் அந்த பாடல், ஏன் இந்த மனிதர்கள் சுவர் ஓரம் அசுத்தம் செய்கிறார்கள்? தெருக்களை சுத்தம் செய்பவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்பவர்கள் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா? என்கிறது.

லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோவைக் குறித்து எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

என்றாலும் நகர மேயரான Anne Hidalgo கூறும்போது, நகைச்சுவை மூலமாக இளைஞர்களைக் குறிவைக்கும் நோக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்