பிரான்ஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் 2018ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நேற்றைய தினம் 25 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பம் பதிவானது. இது இந்த ஆண்டில் 88வது தடவையாக பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

இதனால் பிரான்ஸ் வானிலை வரலாற்றிலேயே அதிக நாட்கள் 25 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பம் பதிவானது 2018ஆம் ஆண்டுதான் என தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 1947ஆம் ஆண்டு 87 தடவைகள் பிரான்சில் 25 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் பின்னர், 2003ஆம் ஆண்டு 82 தடவைகள் இந்த வெப்பம் பதிவானது.

இந்நிலையில், தற்போது நிலவும் வெப்பம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பமாக நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்