பிரான்சில் இரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பொலிசாரிடம் வேதனையுடன் சொன்ன சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இளம் பெண் ஒருவர் இரயிலில் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்ட பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரான்சில் Essarts-le-Roi இரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார்.

அதன் பின் அவர் உடனடியாக அருகிலிருக்கும் Rambouillet மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்ணிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நான் மொம்பர்னாஸ் இரயில் நிலையத்தில் இருந்து வருகிறேன்.

நான் மது அருந்தியிருந்தியிருந்தேன். அப்போது இரயில் Trappes இரயில் நிலையத்தை நெருங்கும் போது, என்னை சிலர் சுற்றி வளைத்தார்கள்.

அவர்களில் ஒருவன் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகவும், நான் எப்படி Rambouillet இரயில் நிலையத்திற்கு வந்தேன் என்பது நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து இளம் பெண்ணின் பெற்றோரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers