மீண்டும் சர்ச்சையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பணக்காரர்களின் ஜனாதிபதி என விமர்சிக்கப்படும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் மக்களை சந்தித்த மேக்ரான், தன்னிடம் வேலை கிடைக்கவில்லை என்று கூறிய ஒரு நபரிடம், சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றால் போதும், நிறைய வேலைகள் கிடைக்கும் என்று கூறியதற்காக விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார்.

அந்த நபர் தனக்கு 25 வயதாகிறது என்றும், பல இடங்களுக்கு வேலைக்காக விண்ணப்பம் அனுப்பியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் மேக்ரானிடம் கூறுகிறார்.

அதற்கு மேக்ரான், உங்களுக்கு ஆர்வமிருந்தால், ஹோட்டல்கள் மற்றும் கட்டுமான வேலைகள் ஏராளம் இருக்கின்றன என்றும், நீங்கள் எங்கு சென்றாலும் வேலை இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றால் போதும் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

அந்த நபர் நன்றி என்று கூறி மேக்ரானிடம் கைகுலுக்குகிறார். இந்த சம்பவம் ட்விட்டரில் வெளியானதும் விமர்சகர்கள் உடனடியாக, இன்னும் ஜனாதிபதி தன்னுடைய ’பணக்காரர்களின் ஜனாதிபதி’ என்னும் அந்தஸ்தை விட மறுக்கிறார் என்று அவரை வறுத்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.

ஏழைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர் என்றும் வேலையில்லாதவர்களை மோசமாக நடத்துவதாகவும் மேக்ரான் மீது கடும் விமர்சனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...