பிரான்சில் பெண் ஊழியரை தாக்கிய கும்பல்! மிகவும் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய அகதி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெண் ஊழியர் ஒருவர் தாக்கப்படுவதைக் கண்ட அகதி ஒருவர் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு அவரை காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 19-ஆம் வட்டாரத்தின் rue d'Aubervilliers-இல் உள்ள Aeolus பூங்காவில் கடந்த செவ்வாய் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7.55 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அங்கிருந்த பெண் ஊழியரை மோசமாக தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த வழியே சென்ற அகதி ஒருவர் ஏதோ சத்தம் வருவதைக் கேட்டு எழுந்து ஓடி வந்து, மதுபோதையில் இருந்த அந்த நான்கு பேரையும் அடித்து துரத்தி, பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

அதன் பின் இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவரின் தலையில் இலேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers