பாரிஸில் மோசமாக தாக்கப்பட்ட பெண்: வீரனாக செயல்பட்டு காப்பாற்றிய அகதி

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள பூங்காவில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பெண் ஊழியரை அகதி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

பாரிஸின் Rue d'Aubervilliers பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று குடிபோதையில், பெண் ஊழியர் ஒருவரை மோசமாக தாக்கியுள்ளது.

அப்போது அந்த இடத்திற்கு வந்த அகதி ஒருவர், துணிச்சலுடன் அந்த நபர்களை அடித்து துரத்தி குறித்த பெண் ஊழியரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் காயமடைந்த பெண் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை காப்பாற்றிய அகதி தான் அகதிகள் பகுதியில் வசிப்பதாகவும், சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்ததாகவும் பின்னர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...