பிரான்சில் பேருந்தின் உள்ளே கேட்பாரற்று கிடந்த ரொக்க பணம்! எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பேருந்தின் உள்ளே சுமார் €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த திங்கட் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேருந்து ஒன்று புறப்படுவதற்கு முன்பு, அந்த பேருந்தை RATP சாரதி சோதனையிட்டார்.

பேருந்தின் சக்கரங்களை சோதனையிட்ட பின்பு, உள்ளே சென்று சோதனையிட்டார். அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதைக் கண்ட, அவர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

அதன் பின் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் பொலிசார் அதை பார்த்த போது, குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது.

இதை எடுத்துக் கொடுத்த சாரதியின் செயலைக் கண்டு பொலிசார் அவரை பாரட்டியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers