சர்வதேச அழகுக்கலை போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ்ப்பெண்!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அழகுக்கலை போட்டியில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் பெண் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடப்பாண்டிற்கான சர்வதேச அழகுக்கலை போட்டி கடந்த 10-ம் தேதியன்று நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 11-ம் தேதியன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஜெயபிரகாஷ் கயல்விழி, இரண்டாம் பரிசை வென்றார்.

நாடு திரும்பிய கயல்விழிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணராக கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குபெற்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை சார்பில் பங்கேற்ற ஒருவர் பதக்கம் வென்றது ஏறத்தாழ இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக பரிசு வென்ற கயல்விழி கொழும்பு ராமநாதன் இந்து கல்லூரியில் படித்து படம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers