பிரான்சில் பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! துரிதமாக செயல்பட்ட பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இளம் பெண்ணிடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டதுடன், தாக்கிய நபரை பொலிசார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இளம் பெண் ஒருவர் சாலையோரம் உணவகம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன், உணவகத்தில் இருந்த ஒரு ஆஷ் ட்ரேயை தூக்கி அவள் மீது வீசினான்.

இதனால் அப்பெண் ஆத்திரத்தி கத்தியதால், மீண்டும் அவரை நோக்கி வந்த இளைஞன் பளார் என்று அடிவிட்டான். அதன் பின் இது தொடர்பான வீடியோ வெளியானது.

அந்த பெண் என்னை தாகாத வார்த்தையால் அந்த நபர் திட்டினார். தொடர்ந்து என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.

இதை ஒரு சம்பவமாக கடந்து செல்ல விரும்பவில்லை. பெண்களுக்கு இவ்வாறான துன்புறுத்தலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளேன்.

என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாம் மெளனமாக இருக்க கூடாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அவருக்கு ஆதரவுகள் பெருகின. வீடியோ கிடைத்த போதும், அந்த நபரின் பெயர், முகம் சரியாக தெரியாத காரணத்தினால், பொலிசார் அந்த நபரை பிடிப்பதற்கு திணறி வந்தனர்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை அந்தநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் மனநிலை பாதித்தவரா என்பதைப் பற்றி அறிய பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சிசிடிவி காட்சி வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்