பிரான்சில் காரில் சென்ற போது மனைவியுடன் தகராறு! திடீரென்று காரை விட்டு இறங்கி காட்டுக்குள் சென்ற கணவன்

Report Print Santhan in பிரான்ஸ்

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் நடு வீதியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்ற சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Milly-la-Forêt பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் A6 சாலையில், தலைநகர் பாரிசை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது Fleury-en-Bière பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை கார் நெருங்கிய போது கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

சுங்கச்சாவடியில் இருந்தவர்கள் இந்த வாக்குவாதத்தை கவனித்ததால், பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர், காரை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, கீழே இறங்கி வீதியை கடந்து அருகில் இருந்த காட்டுக்குள் இறங்கிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கணவரை காணாததால், மனைவியும் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் உடனடியாக விரைந்து வந்த பொலிசார் காட்டுக்குள் தேடுவதற்கு ஹெலிகாப்டர் தேவைப்படும் என்பதால், ஹெலிகாப்டரில் பறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, அவர் கண்டு பிடிக்கப்பட்டார்.

கணவர் மூன்றரை மணிநேரம் கழித்து காட்டுக்குள் இரவு 9.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...