பிரான்ஸில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த இலங்கையர்கள்! அதிரடியாக கைது செய்த பொலிசார்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸின் Porte de Pantin பகுதியில் நேற்று சந்தேகத்திற்கு இடமாக குழுவாக இருந்த 14 நபர்களை பொலிசார் கைது செய்தனர்.

அவர்களது பைகளை சோதனை செய்தபோது அதில் வெட்டுக்கத்தி, அருவாள், இரும்புக்கம்பிகள் மற்றும் கண்ணீர்புகை குண்டுகள் ஆகியவை இருந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம், ஏதேனும் குழுக்களைச் சேர்ந்தவர்களா என்கிற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்