பாரீஸில் இறந்த பிரித்தானிய இளம்பெண்: பரிதாபப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

விபத்து ஒன்றில் ஒரு இளைஞன் உயிரிழக்கக் காரணமாக இருந்த குற்ற உணர்ச்சியால் போதைப் பொருளுக்கு அடிமையாகி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் பிரித்தானிய செல்வந்தர் ஒருவரின் மகளான ஒரு இளம்பெண்.

Hannah James (37) பாரீஸிலுள்ள தனது குடியிருப்பில் குளியலறையில் பிணமாகக் கிடந்ததாக அவரது காதலர் தெரிவித்துள்ளார்.

அவர் பல போதைப் பொருட்களை அருந்தியிருந்தது பின்னர் தெரியவந்தது.

ஏற்கனவே திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த அவர் இன்னொரு விபத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்.

2010ஆம் ஆண்டு அவருடைய கார் மோதியதில் 17 வயதான Joel Semmens இறந்து போனார்.

ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த Hannahவை இந்த விடயம் இன்னும் அதிகம் பாதித்தது.

2017ஆம் ஆண்டு மீண்டும் காதலில் விழுந்தபோது தனது வீட்டைக் காண்பதற்காக உறவினர்களை அழைத்தார் Hannah.

ஆனாலும் அவரது மன அழுத்தம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவரது காதலர் கூப்பிட்டுப் பார்த்தும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது குளியலறையில் பிணமாக கிடந்துள்ளார் Hannah.

அதீத போதைப் பழக்கத்திற்கு வழி வகுத்த அவரது மன அழுத்தம் கடைசியில் அவரது உயிரையே பறித்து விட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்