தாயையும் தங்கையையும் குத்தி கொலை செய்த நபர்: மன நோயாளியா தீவிரவாத தொடர்புடையவரா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீசுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள Trappes பகுதியில் தனது தாயையும் தங்கையையும் கத்தியால் குத்திக் கொலை செய்த ஒரு நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் அவர் தீவிரவாத தொடர்புடையவரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெயர் வெளியிடப்படாத 36 வயதுடைய ஒரு நபர் நேற்று பட்டப்பகலில் Trappes பகுதியில் தனது தாயையும் தங்கையையும் கத்தியால் குத்தினார்.

பின்னர் ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்ட அவர் பொலிசாரைக் கண்டதும் அவர்களை நோக்கி பயமுறுத்தியவாறே ஓடி வந்ததால் பொலிசார் அவரை சுட்டுக் கொன்றனர்.

அந்த நபர் மிக மோசமான மன நல பிரச்சினஇகள் கொண்டவர் போல் தோன்றுகிறது என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நபர் என அவர் பொலிசாரால் அறியப்பட்டாலும் தீவிரவாத குழுக்களின் அழைப்புக்கு இணங்கும் ஒரு நபர் போல தோன்றாமல் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவாராகத்தான் அதிகம் தோன்றுகிறது என்றார் அவர்.

விசாரணை அதிகாரிகள் இந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதலாக கருதி விசாரிக்கவில்லை என்றாலும் மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார் அவர்.

ஆனால். சிவில் உரிமைகள் நிபுணரும் வழக்கறிஞருமான Asif Arif, இந்த வழக்கு சாதாரண வழக்கு அல்ல, அது பிரச்சினைக்குரிய ஒன்று என்று தெரிவிக்கிறார்.

முதல் பிரச்சினை என்னவென்றால், பிரான்ஸ் அதிகாரிகள் இந்த தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் என்ற முடிவுக்கு வராத நிலையிலும் அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

அதாவது உள்ளூரில் எந்த தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்பதன் மூலம் அந்த அமைப்பு மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயல்கிறது.

இரண்டாவது, தாக்குதல் நடத்திய நபர் அரசாங்கத்தால் உற்று கவனிக்கப்படும் நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கு ஒரு கத்திக் குத்து வழக்காக மட்டுமின்றி தீவிரவாத தொடர்புடைய வழக்காகவும் கருதப்பட வேண்டும் என்பது அவருடைய கருத்தாக உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...