பாரீஸ் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பாரிஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில், இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் நகரின் பகுதியில் மர்ம நபர் ஒருவர், திடீரென அரேபிய மொழியில் 'அல்லாவு அக்பர்' என சத்தமிட்டவாறே கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, கவலைக்கிடமான நிலையில் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர் அந்த நபர் வீட்டுக்குள் சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் இருந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

சம்பவம் அறிந்து தற்போது ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 30களில் இருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...