மறுசுழற்சி அல்லாத பிளாஸ்டிக்கிற்கு அபாராதம் விதிக்கும் பிரான்ஸ்: சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி திட்டம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் ஒன்று, அடுத்த ஆண்டு முதல் கொண்டுவரப்பட உள்ளது.

இதன்மூலம், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு செலவு 10 சதவிதம் குறையும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது 2025ஆம் ஆண்டிற்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு உறுதிமொழி இது எனவும் சுற்றுச்சுழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான மாநில செயலாளர் Brune Poirson கூறுகையில், ‘வரும் ஆண்டுகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், பிளாஸ்டிக் போத்தல்களுக்கான வைப்புத்தொகையும் திரும்பப்பெறும் திட்டமும் இதில் அடங்கும்.

பிளாஸ்டிக் மீதான போர் தற்போது போதுமானதாக இல்லை. பிரான்ஸ் பொருளாதாரத்தை நாம் மாற்றியமைப்பது அவசியம். மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத இரண்டு போத்தல்களில் மறுசுழற்சி மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் போத்தலுக்கான செலவுதான் குறைவாக இருக்கும்.

மேலும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் உபயோகம் மற்றும் உற்பத்தி குறையும்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், Packaging செய்ய தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவு 40 சதவிதம் உலக அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers