மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்திலிருந்து இறக்கி விட்டதற்கு பிரான்ஸ் அமைச்சர் கடும் கண்டனம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வலிப்பு நோய் மற்றும் ஆட்டிசக் குறைபாடு கொண்ட சிறுவன் ஒருவனை விமானத்திலிருந்து இறக்கி விட்டதற்கு பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான Isabelle Kumarஇன் மகன் Eli, வலிப்பு நோய் மற்றும் ஆட்டிசக் குறைபாடு கொண்டவர்.

Eli தனது குடும்பத்தாருடன் துபாயிலிருந்து பிரான்சுக்கு பயணிக்கும்போது விமான ஊழியர்களிடம் உதவி கோரிய போது அவர்கள் உதவ மறுத்ததோடு மொத்தக் குடும்பத்தையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கி விட்டனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் Isabelle Kumar செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரான்சின் மாற்றுத்திறனாளிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான Sophie Cluzel, “இவை மோசமான குறைபாடுகள், இவை தாக்குதல்கள், இது குறைபாடுடையவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடு என கடும் சொற்களால் விமான துறையை கண்டித்துள்ளார்.

குறைபாடுடையவர்கள் பயணம் செய்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு விமானத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ள Sophie Cluzel, விமான நிறுவனங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை அணுகுவதற்கு தங்கள் ஊழியர்களுக்கு போதுமான பயிற்சியளிப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் விமான நிறுவனம் Isabelle Kumarஇன் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்