ரஷ்யா ஒத்துழைப்புடன் சிரியாவுக்கு உதவும் பிரான்ஸ்: ஏழாண்டு சிவில் யுத்தத்திற்கு முடிவா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஏழு ஆண்டுகளுக்குப்பின் ரஷ்யா ஒத்துழைப்புடன் சிரியாவுக்கு மருத்துவ உதவிகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது மேற்கத்திய நாடுகள் சிரியாவுக்கு உதவி செய்யும் முதன்முறையாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிரான்ஸ் 2011ஆம் ஆண்டு சிரியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பல மாதங்களாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சிரியா குறித்து பேசி மனிதநேய உதவிகளை அனுப்புவதில் இருந்த தடைகளை தகர்க்க முயற்சி செய்து வந்த நிலையில் தற்போதைய இந்த நடவடிக்கை ஏழு வருட சிவில் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் முக்கிய படியாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் 50 டன் மருந்துகளை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சிரிய பகுதிக்கு அனுப்புகிறது.

இந்த மருந்துகளை சிரியாவுக்கு கொண்டு செல்ல இருப்பது ரஷ்ய விமானம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிரான்சிலிருந்து புறப்படும் அந்த ரஷ்ய விமானம் வடமேற்கு சிரியாவிலிருக்கும் ரஷ்ய இராணுவத் தளத்திற்கு சென்று மருந்துப் பொருட்களை இறக்க உள்ளது.

இந்த உதவி தொடர்பான அனைத்து அனுமதிகளையும் ஆசாத் அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக ரஷ்யா பிரான்சுக்கு உறுதியளித்துள்ளது.

பிரான்ஸ் அனுப்பும் இந்த மருந்துகளால் மோசமாக காயமடைந்துள்ள 500 பேரும் குறைவான காயங்களுடன் இருக்கும் 15,000 பேரும் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்