ரகசிய காப்பு ஒப்பந்தம்: பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கை இதுதான்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.

இந்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசிய போது, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பில் ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மோடி அரசு கூறுகிறது.

ஆனால் நான் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோனுடன் பேசுகையில் அவ்வாறு இல்லை என கூறினார், மோடியின் நெருக்கடியால் நிர்மலா சீதாராமன் பொய் கூறுவதாக பேசினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பிரான்ஸ், கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், பங்குதாரர் கூறும் உரிய தகவலை இருநாடுகளும் ரகசியம் காக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, அவர்கள் வேண்டுமென்றால் அதை மறுக்கட்டும், ஆனால் ஜனாதிபதி என்னிடம் இதை தான் கூறினார், அந்நேரத்தில் மன்மோகன்சிங் உடனிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers