உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பிரான்ஸ் ஹீரோ! மிகப் பெரிய பிளக்சில் எழுதியிருந்த முக்கியமான வார்த்தை

Report Print Santhan in பிரான்ஸ்

உலகக்கிண்ணப் போட்டியில் சாதித்து காட்டிய பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கைலன் மேபாபிக்கு அந்நாட்டில் மிகப் பெரிய பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடரில் பிரான்ஸ் அணியின் இளம் வீரரான Kylian Mbappé தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.

தன் காலில் பந்தை வைத்துக் கொண்டே மற்ற வீரர்களை சுற்ற வைத்தார். அடுத்த ரொனால்டோ, மெஸ்ஸி என்று பலரும் இவரை கூறுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக இவர் பெயர் தான் உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்டது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் பிரான்சின் Bondy நகரின் நுழைவுப் பகுதியில் மிகப் பெரிய பிளக்ஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அந்த பிளக்சில் பிரான்சின் மூவர்ண கொடியை பின்னணியிலும், பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் ஆடையை அணிந்த Kylian Mbappé -இன் முகம் ஒரு பகுதியிலும், மற்று பகுதியில் சில எழுத்துக்களும் இருந்தன.

ஏனெனில் Bondy பகுதியில் தான் Kylian Mbappé தன்னுடைய இளைமை காலத்தை கழித்திருந்தார்.

அதுமட்டுமின்றி அந்த பிளக்சில் 1998-ஆம் ஆண்டு பிரான்ஸ் கால்பந்தாட்ட அணிக்கு மிகச் சிறந்த ஆண்டாகும், Kylian Mbappé அந்தாண்டு தான் பிறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

1998 ஆம் ஆண்டு Kylian Mbappé பிறந்த அதே ஆண்டில் தான் முதன் முதலாக பிரான்ஸ் கால்பந்தாட்ட அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers