பிரான்ஸ் நாட்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள பால்வினை நோய்கள்: ஆய்வில் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் 2012க்கும் 2016க்கும் இடையே பால்வினை நோய்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சோகமான விடயம் என்னவென்றால் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2012க்கும் 2016க்கும் இடையே கிளமைடியா மற்றும் கொனோரியா ஆகிய நோய்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பான பாலுறவு கொள்ளுமாறும், அவ்வாறு பாதுகாப்பாக செயல்படாவிட்டால் மருத்துவமனைகளில் சென்று நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டுள்ளதாக என்று பரிசோதித்துக் கொள்ளுமாறும் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு 267,097 பேருக்கு கிளமைடியா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 2012இல் அது வெறும் 76,918 ஆகத்தான் இருந்தது, அது தற்போதைய கணக்கை விட மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொனோரியாவைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2012இல் 15,067 ஆக இருந்தது 2016இல் 49,628 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது, 2016இல் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100,000 பேரில் 91 பேர் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாதுகாப்பாக பாலுறவு கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சுகாதாரத்துறை வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்