எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பேரணி ஒன்றில் எதிர்ப்பாளர்களை பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலரான Alexandre Benalla ஒருவர் அடித்து நொறுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு பெண்ணை கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார் அவர்.

பின்னர் ஒரு இளைஞரை பொலிசார் சிலர் தாக்க இவர் வந்து அந்த இளைஞரை இழுத்துக் கொண்டு போய் நாயை அடிப்பதுபோல் அடிக்கிறார்.

தன்னை விட்டு விடும்படி அந்த இளைஞர் எவ்வளவோ கதறியும் அவரை விடவில்லை Alexandre. ஒரு எதிர்ப்பாளர் வீடியோ எடுத்துக் கொண்டே அவரை பார்த்து கத்துகிறார்.

கடைசியில், பார்த்துக் கொண்டிருந்தவர்களும் வீடியோ எடுப்பவரும் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் தான் வீடியோ எடுக்கப்படுவதையும் தனக்கு எதிர்ப்பு அதிகரிப்பதையும் புரிந்து கொண்ட Alexandre அந்த இளைஞரை நடுத்தெருவில் விட்டு விட்டு மெல்ல நழுவுகிறார்.

இந்த வீடியோ வெளியானதும் Alexandre இரண்டு வாரங்கள் ஊதியமில்லாமல் சஸ்பண்ட் செய்யப்பட்டார்.

இது ஜனாதிபதி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு வழங்கப்படும் மிகப்பெரும் தண்டனையாகும்.

பின்னர் அவர் ஜனாதிபதியின் பயணங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யும் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஆனால் இந்த மாதத்திலேயே உலகக் கோப்பை கால் பந்து போட்டியின் வெற்றி விழா பேரணியின் போது உட்பட இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் மீண்டும் அவருக்கு பாதுகாப்பு பொறுப்புகள் வழங்கப்பட்ட தகவலை பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்