பிரான்ஸ் அணியின் இறுதிப்போட்டியை பார்க்க 182 கி.மீற்றர் வேகத்தில் சென்ற நபர்! அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் அணியின் இறுதிப் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக நபர் ஒருவர் 182 கி.மீற்றர் வேகத்தில் சென்ற சம்பவம் பொலிசாரையே அதிர வைத்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியை தவறவிடக் கூடாது என்பதற்காக 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய காரில் சுமார் 182 கி.மீற்றர் வேகத்தில் சென்றுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், 65 வயது மதிக்கத்தக்க நபர் 110 கி.மீற்றர் வேகத்தில் செல்லக் கூடிய இடத்தில், சுமார் 182 கி.மீற்றர் வேகத்தில் சென்றார்.

இதனால் அவரை பிடித்து விசாரித்த போது, கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அசுர வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த நபரின் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் Saint-Lô மற்றும் Guilberville நகரங்களுக்கிடையே உள்ள பகுதியில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்