பிரான்ஸ் ஜனாதிபதியா இது: வைரலாகும் நடன வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தன்னை விட மூத்தவரான ஒரு பெண்ணுடன் நடனமாடுவதாக கூறப்படும் நடன வீடியோ ஒன்று வைரலாக இணையத்தில் வலம் வருகிறது.

உண்மையில் அது இமானுவல் மேக்ரான் தானா? என்னும் கேள்வியும் எழாமல் இல்லை. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தன்னை விட மூத்த ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறான்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி அவரைவிட 25 வயது மூத்தவர் என்பதால், அந்த வீடியோவில் இருப்பது அவர்கள் இருவரும்தான் என பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அந்த நடனத்தின் பின்னணியில் ஒலிக்கும்“Toca Toca” என்னும் பாடல் 2013ஆம் ஆண்டுதான் வெளியானது.

பிரான்ஸ் அதிபர் 1977இல் பிறந்தவர், அப்படியானால் அந்த விடியோவில் அவர் ஆடும்போது அவருக்கு 35 வயது.

வீடியோவைப் பார்த்தால் அந்தச் சிறுவனுக்கு 35 வயது ஆனது போல் தெரியவில்லை. அப்படியென்றால்... அது இமானுவல் மேக்ரான் இல்லை.

என்றாலும் நடனம் சூப்பராகத்தான் இருக்கிறது என்பதை மறுக்க இயலவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers