சூப்பர் ஜோடி அவர்கள்: பிரிஜிட்டை கோபப்படுத்தும் கால்பந்து ரசிகர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகமே உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, ஒரு கூட்டம், விளையாட்டைக் காண வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கும்

க்ரோவேஷிய அதிபர் Kolindaவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை ரசித்ததோடு, சமுக ஊடகங்களில் வெளியிட்ட அவர்களது படங்கள் மற்றும் ட்வீட்களால் மேக்ரான் வீட்டில் அடிதடி நடக்கலாம்.

Kolinda Grabar-Kitarović விளையாட்டுப் போட்டியின்போது பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நன்றாக ஒட்டிக் கொண்டார்.

இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டதும் கைகளைப் பற்றி நடந்ததும் புகைப்படக்காரர்களின் கண்களுக்கு தப்பவில்லை.

இரண்டு பேரும் மணமானவர்கள் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தபோதிலும் “இருவரும் சிறந்த தம்பதிகளாக இருப்பார்கள்” என்ற விமர்சனமும் எழுந்தது.

ஒருவர், இவர்களைப் பார்க்கும்போது நண்பர்கள் போலத்தான் தெரிகிறது, என்றாலும் எனக்கு ஒரே குழப்பம், பின்னணியில் ஏதாவது இருக்குமோ என்று கொளுத்திப் போட்டார்.

சமூக ஊடகங்கள் முழுவதும் இமானுவல் மேக்ரான், Kolindaவின் படங்களும் ட்வீட்களும்தான் நிரம்பிக் கிடக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்