சோகமான பிரான்ஸ் வெற்றிக்கொண்டாட்டம்: தீவிர ரசிகர்கள் 2 பேர் உயிரிழப்பு

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

24 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்த பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் சுமார் 4 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு காரணம் கருதி பாரிஸில் குவிக்கப்பட்டனர்.

Paris' Champs-Elysees Avenue - வில் சுமார் 10 ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ரசிகர்கள் சிலர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்களது உச்சக்கட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இதனால், Avenue முன்கூட்டியே மூடப்பட்டது. கொண்டாட்டத்தில் இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் வெற்றி பெற்ற பிறகு 50 வயது ரசிர்கர் ஒருவர் உற்சாகத்தில் குதிக்கும்போது கழுத்து உடைந்து உயிரிழந்துள்ளார். மற்றொரு 30 வயது ரசிகர் சந்தோஷத்தின் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து காரினை வேகத்தில் ஓட்டிச்சென்று மரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...