கொண்டாட்டம் திண்டாட்டமானது! வரம்பு மீறிய பிரான்ஸ் ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

24 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளதால் பிரான்ஸ் ரசிகர்களின் கொண்டாட்டம் வரம்புமீறியதால் சிலர் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.

ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனை முன்னிட்டு ஈபில் டவரில் 1998 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒளிபரப்பப்பட்டது. வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் சுமார் 4 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு காரணம் கருதி பாரிஸில் குவிக்கப்பட்டனர்.

Paris' Champs-Elysees Avenue - வில் சுமார் 10 ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ரசிகர்கள் சிலர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்களது உச்சக்கட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்த கண்ணீர் புகையால் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மூச்சு எடுக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனால் பொலிசார் தண்ணீரை வாகனத்தின உதவியுடன் தண்ணீரை பாய்சியடித்து, ரசிகர்களை காப்பாற்றியுள்ளனர்.

கொண்டாட்டம் என்றாலும் அதற்கு என்று ஒரு வரையறை உள்ளது, அதனை மீறக்கூடாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers