குரேஷியா பத்திரிக்கையாளரிடம் மேக்ரான் சொன்ன அந்த வார்த்தை! நெகிழ்ச்சியான தருணம்

Report Print Santhan in பிரான்ஸ்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குரேஷியா பத்திரிக்கையாளரிடம் கை கொடுத்து ஆறுதல் சொன்னது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றதால் பிரான்ஸ் அணி வீரர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

அவர்களுடன் சேர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதன் பின் அவர்களை பாராட்டினார்.

இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் ஜனாதிபதி மேக்ரான் பத்திரிக்கையாளர்கள் இருக்கும் பகுதியை கடந்து சென்றார்.

அப்போது குரேஷியா பத்திரிக்கையாளரை கண்டவுடன் உடனடியாக அவரிடம் கை கொடுத்து அற்புதமாக விளையாடினீர்கள், சிறப்பாக முடித்துவிட்டீர்கள் என்று ஆறுதல் கூறினார்.

அப்போது குரேஷியா பத்திரிக்கையாளர் நன்றி ஜனாதிபதி என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் போட்டி முடிந்தவுடன் மேக்ரான் குரேஷியா அணி வீரர்களை சந்தித்து சிறப்பாக விளையாடி வந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers