பிரான்சில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகும் புதிய சாலை விதிகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அடுத்த மாதம் முதல் பிரான்சில் புதிய சாலை விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மிக நீண்ட விவாதங்களுக்குப்பின், நடுவில் மீடியன்கள் இல்லாத கிளைச்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை மணிக்கு 90 கிலோமீற்றர்களிலிருந்து 80 கிலோமீற்றர்களாக குறைக்கும் தீர்ப்பாணை ஒன்றை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.

இதனால் ஆண்டொன்றிற்கு 300 முதல் 400 உயிர்களின் இழப்பு தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது.

ஐரோப்பிய நாடுகளான மால்டா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிளைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர்கள்தான்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த நாடுகளில்தான் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாகும்.

இதனுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் 12ஆவது இடத்திலிருக்கும் பிரான்சில் ஒரு மில்லியன் வாகன ஓட்டிகளில் 54 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.

என்றாலும் mortality rate எனப்படும் மரண வீதம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் மீண்டும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் இந்த சட்டத்திற்காக 12 மில்லியன் யூரோக்கள் செலவில் 11,000 சாலை அறிவிப்பு பலகைகள் மாற்றப்பட உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்