பிரான்சில் நடந்த கோர விபத்து: பிரித்தானியாவைச் சேர்ந்தவர் பலி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் பிரித்தானியாவைச் சேர்ந்த டிரைவர் பலியாகியுள்ளார்.

பிரான்சின் Miramont de Guyenne பகுதிக்கு அருகே உள்ள Monteton என்ற கிராமத்தில் இருக்கும் சாலையில் இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பிரித்தானியாவை சேர்ந்த டிரைவர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தெரிவிக்கையில், பிரான்சைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க பெண் ஓட்டி வந்த கார், எதிர் திசையில் வந்த காரின் மீது மோதியுள்ளது.

இதனால் எதிர் திசை காரில் இருந்த டிரைவர் மோசமான காயங்களுடன் பலியாகியுள்ளதாகவும், தற்போது வரை கிடைத்த தகவலின் படி இறந்த நபர் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் எனவும், ஆனால் அவர் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்