திடீரென வயதானவர் போல் தோற்றமளிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி: காரணம்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

60,000 யூரோக்கள் செலவில் தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் சிலை ஒன்று சற்று வயதானவர் போலவும், அதிக டென்ஷனுடன் காணப்படுபவர் போலவும் அமைந்து விட்டதால் திருத்தி அமைக்கப்படலாம் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.

லண்டனில் அமைந்துள்ள பிரபலங்களின் மெழுகுச் சிலைகளைக் கொண்ட புகழ் பெற்ற Madame Tussauds மியூஸியத்திற்கு இணையாக பாரீஸில் அமைந்துள்ள Grevin மியூஸியத்தில் வைக்கப்படுவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் சிலை ஒன்று 60,000 யூரோக்கள் செலவில் தயாரிக்கப்பட்டது.

சமீபத்தில் அந்த சிலையைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியான நிலையில் பலரும் சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் சிலை சற்று வயதானவர் போலவும், ”ஹாரர்” திரைப்படங்களில் வரும் ஒரு கதாபாத்திரம் போலவும் இருப்பதாக விமர்சித்துள்ளனர்.

"Child's Play" என்னும் படத்தில் வரும் Chucky என்னும் கொலைகார பொம்மையைப் போல் அவரது முகம் இருப்பதாக சிலர் தெரிவித்திருந்தனர்.

இமானுவல் மேக்ரான் திடீரென 10 வயது அதிகமானதுபோல் காட்சியளிக்கிறார் என்று ட்வீட்டியுள்ளார் ஒருவர்.

விமர்சனங்கள் வரத்தொடங்கியதையடுத்து சிலையை உருவாக்கியவர்கள் குறைகளை சரி செய்வதா அல்லது சிலையை முழுவதும் அழித்துவிட்டு மீண்டும் உருவாக்குவதா என்னும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இமானுவல் மேக்ரானின் மனைவியாகிய Brigitte, தனது சிலையை செய்ய இதுவரை அனுமதியளிக்கவில்லை.

அவரது கணவரின் சிலை இப்படி செய்யப்பட்டதையடுத்து அவர் இனி தனது சிலையை செய்ய அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers