பிரான்சில் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடன் சிக்கிய நபர்! தீவிரவாதியா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் இரயில் நிலையத்தில் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்கேரியாவைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்சின் Marseille பகுதியில் உள்ள Gare Saint Charles இரயில்வே நிலையத்தில் சுமார் 48 வயது மதிக்கத்தக்க பல்கேரியா சேர்ந்த நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், இரயிலில் வந்த பெண் ஒருவர் இவரின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய பேச்சை பார்க்கையில் Chechen-யாவை சேர்ந்தவர் போன்று இருந்துள்ளது.

இதனால் அப்பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின் அவரை பொலிசார் பரிசோதித்த போது அவரிடம் சில எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் இருந்துள்ளன.

அவை எல்லாம் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்றாலும், வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்கள் என்பதால், பொலிசார் தீவிரவாதியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் தான் தலைநகர் பாரீசில் Chechen-யாவை பிறப்பிடமாக கொண்ட தீவிரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 5 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers