படவிழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இத்தாலி நடிகை பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் படவிழா உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். இவ்விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் கடைசி நாளில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டோ கரகோஷங்களுடன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். அவர் கூறுகையில்,

‘நான் சில வார்த்தைகளை கூற வேண்டும். 1997ஆம் ஆண்டு இங்கு வந்திருந்தபோது, ஹார்வி வெயின்ஸ்டீனால் நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழா அவரது வேட்டையாடும் களமாக இருந்தது. இதை நான் உரத்து கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உட்பட பலரும் அவர் மீது பாலியல் புகார்களை தெரிவித்தனர்.

மேலும், சமூக வலைதளங்களில் #Metoo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, ஏராளமான நடிகைகள், தங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தாலி நடிகையின் இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chris Pizzello/Invision

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers