பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய இளைஞர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் திட்டிய இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

பிரான்சின் உள்துறை மந்திரி Gerard Collomb கடந்த வெள்ளிக்கிழமை பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும், அதில் இரண்டு இளைஞர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தம் திட்டம் தீட்டியது தெரியவந்ததால், இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும்,அவர்கள் எகிப்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள் எனவும் கூறியுள்ளார்.

தற்போதைக்கு இதற்கு மேல் அதைப் பற்றிய எந்த தகவலையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிரான்சில் சமீபத்தில் தீவிரவாதி ஒருவன் கத்தியை வைத்து தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்