கேன்ஸ் விழாவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய கருப்பின நடிகைகள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில், இனவெறிக்கு எதிராக 16 கருப்பின நடிகைகள் போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

பிரான்சின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 16 கருப்பு இன நடிகைகள் இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர், நடிகை அஸ்ஸா மைகா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து அஸ்ஸா மைகா கூறுகையில், இது ஒரு வரலாற்று தருணம். இது என் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 20 ஆண்டுகளாக, நான் ஒருபோதும் இது போன்று பாதிக்கப்பட்டது இல்லை. நான் அப்படி உணர்ந்ததில்லை என தெரிவித்தார்.

கேன்ஸ் ஜூரி தலைவர் கேட் பிளாஞ்செட் தலைமையில், 82 பெண்கள் சில நாட்களுக்கு முன்னர் பாலின சமத்துவத்திற்கான தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்