பிரான்ஸ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய பாலியல் மீறல் சட்டம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
313Shares
313Shares
ibctamil.com

பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 15 என நிர்ணயிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கைக்கு மாறாக, "வயதுக்கு வராதவர்களுடன் பாலுறவு கொள்ளுதல் மூலம் மேற்கொள்ளும் பாலியல் மீறுதல்" என்னும் புதிய குற்ற வகையை சட்டமன்றம் உருவாக்கியுள்ளது பிரான்ஸ் மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

மாற்றப்பட்டுள்ள புதிய வார்த்தைகள் இன்னும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருமனிதன் அந்த சிறுமியின் சம்மதத்தின் பேரிலேயே பாலுறவு வைத்துக் கொண்டதாக கூறியதையடுத்து அவன் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து சமத்துவ அமைச்சரான Marlene Schiappa, பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 15 என நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார், அவரது கோரிக்கையை ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நீண்ட விவாதத்திற்குப்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 15 என நிர்ணயிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக சட்டமன்றம் வயதுக்கு வராதவர்களுடன் பாலுறவு கொள்ளுதல்மூலம் மேற்கொள்ளும் பாலியல் மீறுதல் என்னும் புதிய குற்ற வகையை உருவாக்கியது.

இச்சட்டத்தின்படி குற்றமிழைத்தோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கான தண்டனை 15 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது UNICEF உட்பட பலரின் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு உடனடியாக ஆளுங்கட்சி ட்விட்டரில் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்