அவர் என்ன உலகத்தின் தலைவரா? பிரான்ஸ் ஜனாதிபதியை வெளுத்து வாங்கும் சமூகவியலாளர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் சமூகவியலாளரான Benoît Hamon, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானை, அவர் உலகத்தின் தலைவர் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு அதிகாரமற்ற தன்னையே பெரிதாக எண்ணிக்கொள்ளும் ஒரு மனிதர் என்றெல்லாம் வெளுத்து வாங்கியுள்ளார்.

மேக்ரானின் அதீத தாராளமயமாக்கல் இறுதியில் ஐரோப்பாவின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தன்னை ஒரு சர்வதேச தலைவர் போல் காட்டிக்கொள்ளும் ஒரு ஜனாதிபதியை நாம் பெற்றுள்ளோம், அவர் வேண்டுமானால் பத்திரிகைகளின் அட்டைப்படங்களை ஜொலிக்கச் செய்யலாம் ஆனால் அவரால் பிரான்சின் புகழை ஜொலிக்கச் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இடதுசாரி அரசியல்வாதியான Benoît, மேக்ரானின் மறு சீரமைப்புத் திட்டங்களையும் தாக்கிப் பேசினார்.

மேக்ரான் ரயில்வே துறையில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த Benoît, மேக்ரான் மணல் கோட்டை கட்டும் ஒரு சிறு குழந்தையைப் போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரான்சும் ஜேர்மனியும் இணைந்து நடத்தினால்தான் ஐரோப்பாவே செயல்படும் என்று எண்ணுவதாகவும் ஆனாலும் ஜேர்மன் சான்ஸலர் இவர் முன்வைக்கும் பெரும்பாலான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் Benoît கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருடனான உறவையும் சரியாக தொடர இயலாத நிலையில் மேக்ரான் இருப்பதாகக் குத்திக் காட்டும் Benoît, கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு முதல் சுற்றில் வெறும் ஆறு சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்