சர்ச்சையை கிளப்பும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மெழுகு சிலை

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாரிசில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜேர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே, இம்மானுவேல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Sept à Huit எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த மெழுகு சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

பொதுமக்களுக்காக இதுவரை திறக்கப்படவில்லை என்றபோதும், அவர்களது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில், மெழுகு சிலையின் புகைப்படமும், இம்மானுவேல் மக்ரோனின் புகைப்படத்தையும் இணைத்து, உருவ ஒற்றுமைக்கான வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கோரப்பட்டிருந்தது.


இதில் பலர் 10 க்கு 3 என மட்டுமே உருவ ஒற்றுமைக்காக வாக்களித்துள்ளனர்.

அதிலும் மக்ரோன் அணிந்துள்ள ஆடை மாத்திரமே ஒரே போன்று உள்ளது எனவும், மக்ரோனின் உருவம் வேறு ஒருவர் போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் தற்போது இந்த புகைப்படம் மிக வேகமாக பரவி வரும் பல கேலியான கருத்துக்களுக்கும் உள்ளாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்