மார்பக புற்றுநோயின் விழிப்புணர்வாக பாரிசிலுள்ள ஈபிள் கோபுரத்தின் முன்பாக உள்ளாடையை கழற்றி வீசும் நிகழ்வு இடம்பெற உள்ளது.
தொடர்ச்சியான ஒன்பதாவது வருடமாக Pink Bra Toss அமைப்பினர் இந்த நிகழ்வை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வருடம், வரும் ஞாயிற்றுக்கிழமை 15.00 மணி அளவில் ஈபிள் கோபுரத்தின் முன்பாக பல பெண்கள் மற்றும் பாடகர்கள், நடன அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.
அதன் பின்னர் கலந்துகொண்டவர்கள் தங்கள் உள்ளாடையை கழற்றி மேலே வீசுவார்கள் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு, மார்பக புற்றுநோய்க்கு எதிராக தங்கள் விழிப்புணர்வையும், நிதி சேகரிப்புக்கு உதவுமாறும் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.