உங்களது ருசியான மனைவி: அவுஸ்திரேலிய பிரதமரின் மனைவியை வர்ணித்த பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பிரதமரின் மனைவியை ருசியானவர் என வர்ணனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அரசு முறை பயணமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில், சிட்னியில் உள்ள கிர்பி மாளிகையில் சம்பிரதாய விருந்து வழங்கப்பட்டது.

இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, இனிமையான வரவேற்பிற்காக உங்களுக்கும் உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி என கூறினார்.

மேக்ரானின் இந்த வர்ணனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இவர் தெரியாமல் ”ருசியான” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், ஆங்கிலப்புலமை மிக்க ஒரு ஜனாதிபதி இப்படியா பேசுவது என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.

Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...