France.com வலைத்தளப்பக்கம்: அரசாங்கத்தின் மீது வழக்கு பதிந்த நபர்

Report Print Trinity in பிரான்ஸ்

Jean-Noel Frydman என்பவர் தான் பதிவு செய்து வைத்திருந்த France.com என்ற வலைத்தளப் பக்கத்தை அரசாங்கம் முறைகேடான வழியில் பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

கடந்த 1994ஆம் ஆண்டு France.com வலைத்தளத்தை பதிவு செய்தவர் Jean-Noel Frydman.

அமெரிக்காவில் வாழும் பிரெஞ்சு மக்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் ரசிகர்களுக்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற முறையில் France.com இயங்கியதாக கூறி இவர் மீது பிரான்ஸ் அரசு வழக்கு பதிவு செய்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், குறித்த வலைத்தளத்தை அரசாங்கத்துக்கு வழங்குவதாக பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தன்னுடைய முறையான அனுமதியை பெறாமல் பிரான்ஸ் குறித்த வலைத்தளத்தை பயன்படுத்தி வருவதாக Jean-Noel Frydman அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் பிரான்ஸ் குடியரசு உட்பட பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சகம், பிரான்ஸ் சுற்றுலாத்துறை மற்றும் டொமைன் பதிவாளர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் Jean-Noel Frydman தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers