ஆங்கிலத்தில் நடத்த எதிர்ப்பு: ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிரான்ஸ் தூதர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டுக்குப் பின்னான பட்ஜெட் குறித்த கூட்டம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திலிருந்து பிரான்ஸ் தூதர் வெளி நடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Philippe Leglise-Costa என்னும் பிரான்ஸ் தூதர் ஐரோப்பிய ஒன்றியத்தில் காணப்படும் மொழி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வெளி நடப்பு செய்தார்.

ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழிகளுடன் பிரெஞ்சு மொழியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உபயோக மொழிகளில் ஒன்றாக இருக்க, சமீப காலமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு அது புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த பல்லாண்டு பட்ஜெட் போன்ற முக்கியமான விடயம் குறித்து பேசும் நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் அனைத்து மொழிகளுக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரெஞ்சு தூதரக அதிகாரி ஒருவர் அனைத்துமே ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்னும் டிரெண்ட் ஒன்று உருவாகி வருவதாக விமர்சித்தார்.

விவாதங்களை இதர மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மீண்டும் முக்கியத்துவம் பெற முயற்சிக்கும் பிரான்சின் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டுக் குறைவு ஒரு முற்றுப்புள்ளியல்ல என்று கூறி அதை மீண்டும் மேம்படுத்தும் திட்டம் உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், Luxembourgஇன் முன்னாள் பிரதமரான Jean Claude Juncker என்பவர் ஆங்கிலம் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும் அயர்லாந்து மற்றும் மால்டா போன்ற சிறு உறுப்பினர் நாடுகளில் மட்டுமே அது அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers