கஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்

Report Print Athavan in பிரான்ஸ்

பிரான்ஸில் 10 மாத குழந்தை ஒன்று பெற்றோர் வைத்திருந்த கஞ்சாவை தெரியாமல் சாப்பிட்ட காரணத்தால் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாரிஸில் உள்ள Armand-Trousseau மருத்துவமனையில் நேற்று 10 மாத பெண் குழந்தை மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் குறித்த நிலைக்கு கஞ்சா போதை தான் காரணம் என கண்டறிந்தனர்.

இதை தொடர்ந்து இந்த தகவலை பிரான்ஸின் சிறுவர் பாதுகாப்பு படைக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக குழந்தையின் பெற்றோரை கைது செய்த சிறுவர் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பல ஆண்டுகளாகவே அவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததும், குழந்தை கஞ்சாவை உட்கொண்டது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தையின் சகோதரர்களான, 2 மற்றும் 4 வயது சிறுவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவர்களின் ரத்தத்திலும் குறைந்த அளவு கஞ்சா போதை மற்றும் கொக்கைன் போதை இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெற்றோருக்குரிய கடமையை செய்ய தவறியது, போதைப்பொருள் உபயோகம் மற்றும் சிறுவர்களுக்கு வேண்டுமென்றே ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers