எல்லோருடனும் போர் புரிவது நல்லதல்ல! ட்ரம்ப்பிற்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

Report Print Trinity in பிரான்ஸ்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் சந்திப்பு இன்று இரவு (திங்கள்) நிகழவிருக்கும் நிலையில் கடந்த ஞாயிறன்று வாஷிங்க்டனில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருக்கிறார் அதிபர் மேக்ரான்.

இந்த சந்திப்பு நிகழும் முன் பத்திரிகை பேட்டி ஒன்றில் பேசிய இம்மானுவேல் மேக்ரான் தனக்கும் டிரம்புக்கும் இடையே வலுவான உறவு இருப்பதாக கூறினார்.

அதே நேரத்தில் இந்த சந்திப்பின் போது ஈரான் பிரச்சனை, காலநிலை பற்றிய விஷயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் இவை குறித்த டிரம்பின் தீவிர நிலைப்பாடுகள் குறித்து நட்பின் அடிப்படையில் தான் முன் கூட்டியே எச்சரிக்கை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி நாடுகளுடன் வர்த்தக யுத்தம் செய்வது சரியல்ல எனும் இம்மானுவேல் மேலும் எல்லா நாடுகளுடனும் எல்லாவிதத்திலும் சண்டையிட்டுக் கொள்வது நல்லதல்ல என்றும் கூறினார்.

சீனாவோடு போர், ஐரோப்பாவோடு சண்டை, சிரியாவோடு போர் , ஈரானுக்கு எதிரான யுத்தம் போன்றவை அவசியமல்ல என்றும் எதிரிகளை விட நட்புகள் தான் அமெரிக்காவிற்கு தேவை என்றும் தான் வலியுறுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், முரட்டு நாடுகள் மற்றும் சர்வாதிகாரிகளின் செல்வாக்கை குறைப்பதற்கும் தாங்கள் அமெரிக்காவின் முதுகெலும்பாக இருந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் உடனான நிலைமை தனக்கு திருப்தியாக இல்லை என்றும் , அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்வதற்கான சிறந்த காரணங்களை கண்டுபிடித்து அதன்படி செயல்படுவது நல்லது என்றும் கூறினார்.

இந்த பிரச்சனை பற்றி இந்த வாரம் விவாதிக்கப்படும் எனும் மேக்ரான், வரவிருக்கும் நாட்களில் சர்வதேச நாடுகளில் இருந்து அலுமினியம் மற்றும் எஃகு மீது சுமத்த விரும்பும் சர்வதேச கட்டணங்களிலிருந்து டிரம்ப் விலக்களிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூட்டணி நாடுகளுடன் இணைந்து சிரியாவைத் தாக்கிய நிலையில் சிரியாவில் அமெரிக்கப் படைகள் இருப்பது பற்றியும் விவாதிக்கப் போவதாக கூறியுள்ளார்.

சிரியாவை அணுகும்போது சற்று ராஜதந்திரத்துடனே அணுகுமாறு தாம் கூறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏனேனில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அது தீவிரவாதிகளுக்கான நேரமாக மாறிவிடக் கூடும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

ஆகவே வெறும் அமெரிக்க படைகளை மட்டும் அனுப்பாமல் சற்று ராஜதந்திரத்தையும் செயல்படுத்த வேண்டும் எனும் அதிபர் இம்மானுவேல் போருக்குப் பின் புதிய சிரியாவை உருவாக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியம் தேவை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் விசாரணைகளில் ட்ரம்பின் நடவடிக்கைகளை வைத்து அவர் இப்படிப்பட்டவர் என்று முடிவு செய்து விட தான் விரும்பவில்லை எனறும் அவர் தெரிவித்திருந்தார்.

மீண்டும் மீண்டும் கூட்டணி நாடுகளுடன் வர்த்தக யுத்தம் செய்வதை சரியல்ல எனும் இம்மானுவேல் வரும் மே 1ம் தேதி டிரம்ப் என்ன கூறுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

தனக்கும் ட்ரம்பிற்கும் இடையே விஷேசமான உறவிருப்பதாக கூறும் இம்மானுவேல் தங்களிருவரின் ஒற்றுமைகள் பற்றி சொல்கையில் இரண்டு நாடுகளுமே எதிர்பாராத நிலையில்தான் எங்கள் இருவரையும் அதிபராக ஏற்றுக் கொண்டன என்றும், தாங்கள் சமாதானம் மற்றும் சுதந்திரம் ஆகிய இரு புள்ளிகளில் ஒன்றிணைவதாகவும் கூறினார்.

இந்நிலையில்தான் வர்ஜினியாவின் போடோமக் ஆற்றின் கரையில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டனின் இல்லத்தில் வைத்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணியான திருமதி.மெலானி டிரம்ப் உடன் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜ்டிட் ஆகியவர்களின் சந்திப்பு மற்றும் இரவு உணவு இரண்டும் இன்று (திங்கள்) இரவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers