சிரியா மீது தாக்குதல்: பின்விளைவுகளை சந்திக்கும் பிரான்ஸ், பிரித்தானியா

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1873Shares
1873Shares
ibctamil.com

ஐரோப்பாவின் இரு பெரும் இராணுவ ஜாம்பவான்களாகிய பிரான்ஸும் பிரித்தானியாவும் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்கான பின் விளைவுகளை தங்கள் நாடுகளுக்குள்ளேயே எதிர்கொண்டு வருகிறார்கள்.

முன்பின் யோசிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான உதவியாளர்களைப்போல அவருடன் இணைந்து பிரான்ஸும் பிரித்தானியாவும் சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்காக விமர்சகர்கள் அவ்விரு நாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஐரோப்பியர்களில் பலர் இதை ஏளனமாகவும் சிலர் சந்தேகத்துடனும் பார்க்கிறார்கள்.

சிலர் ஏற்கனவே வன்மத்துடன் இருக்கும் ரஷ்யாவின் வெறுப்பை இன்னும் சம்பாதிக்க வேண்டி வருமோ என்று அஞ்சுகிறார்கள்.

முன்பு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவர் ஈராக் மீது படையெடுத்தபோது அவருடன் கை கோர்க்காததற்காக பாராட்டுகளைப் பெற்ற பிரான்ஸ் தற்போது தனது தனித்தன்மையை இழந்துவிட்டதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அவச்சொல்லுக்கு உள்ளாகியிருக்கிறார்.

தெரசா மேயோ வான் வெளித்தாக்குதல்களை நிகழ்த்தும் முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாததற்காக வெளிப்படையாக குற்றம் சாட்டப்படுகிறார்.

திங்களன்று நாடாளுமன்றத்தின் முன் சிரிய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸுடன் கைகோர்த்ததற்காக தெரசா மே விளக்கமளிக்க உள்ள நிலையில் பிரான்ஸ் சட்டசபையில் இதே விடயம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் சிரிய உள் நாட்டுப் போரில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.

பிரான்ஸில் ஏற்கனவே வேலை நிறுத்தங்களால் அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் மேக்ரான், தற்போது தனித்து நிற்காமல் அமெரிக்காவின் எடுபிடி போல செயல்பட்டதாக தனது நாட்டிலேயே குற்றம் சாட்டப்படுகிறார்.

தெரசா மேயோ விரைந்து செயல் படவேண்டியிருந்ததால், நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் என்றாலும் அவருக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் பலத்து ஒலிக்கின்றன.

பொது மக்களிடையையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ரஷ்யாவுடன் மோதுவது ஆபத்துதான் என்றாலும் தனது மக்களை கொன்று குவிக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறியுள்ள ஒருவர் அதனால்தான் இந்த மூன்று நாடுகளையும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்