சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறாமல் தடுத்து வைத்துள்ளேன்: பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Athavan in பிரான்ஸ்
240Shares
240Shares
ibctamil.com

சிரியாவில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் தான் எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார்.

நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மேக்ரான், சிரியாவில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த சுமார் 2000 பேர் இருக்கும் நிலையில் அவர்களை கூடிய விரைவில் திருப்பியழைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தின் அடிப்படியிலேயே பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், சிரியாவில் அமெரிக்க ராணுவத்தினரை நீண்டகாலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

எனவே அமெரிக்க ராணுவத்தினரை திருப்பியழைக்கும் முடிவை டொனல்ட் ட்ரம்ப் எடுக்க மாட்டார் என் தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் தற்போது நடத்தப்படும் தாக்குதல்களின் வேகம் சற்று குறைந்துவிட்டதாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிரியாவில் ரசாயன தாக்குதல் நடைபெற ரஷ்யா உடந்தையாக இருந்தது, இதுதொடர்பாக தான் ரஷ்யா ஜனாதிபதி புதினுக்கு எடுத்துக்கூறினேன்.

மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவிற்கு முரன்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான ராஜங்க ரீதியிலான பேச்சுவார்த்திகள் தொடர்ந்து நடைபேற்று வருகின்றது என்று கூறினார்.

சிரியாவில் ஏவுகனை தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்னர் கூட தான் ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேசியதாக மேக்ரான் தெரிவித்தார்.

கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் கைப்பற்றிய போது கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இது சிரியாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கே அச்சுருத்தல் எனவே சிரியாவில் அமைதியை நிலை நாட்ட பிரான்ஸ் விரும்பியதாலேயே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரான்ஸ் இணைந்து தாக்குதல் நடத்தியதாக அவர் இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்