3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நீதிமன்றத்தில் சரணடைய பிரான்ஸ் குடிமகனுக்கு உத்தரவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

இந்தியாவின் மும்பை நகரில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக அடுத்த 3 தினங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய பிரான்ஸ் குடிமகனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் Patrick Brilliant.

இவர் குறித்த பாட்சாலையில் உள்ள 3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இவர் மீது காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.

இதனையடுத்து நீண்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் நவம்பர் 7-ஆம் திகதி மும்பை பொலிசாரால் Patrick Brilliant கைது செய்யப்பட்டார். அதே மாதம் 24 ஆம் திகதி அவருக்கு பிணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடி, குறித்த நபருக்கு அளிக்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யவும், தொடர்ந்து விசாரணையை நடத்தவும், உரிய தண்டனையை பெற்றுத்தரவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அடுத்த 3 தினங்களுக்குள் Patrick Brilliant நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும்,

இடைப்பட்ட காலத்தில் பாடசாலையில் நுழைய தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்