சிரியாவில் ரசாயன தாக்குதல்.. ஆதாரம் உள்ளது: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கடந்த சனிக்கிழமை சிரிய அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Douma நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சரியான நேரத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கு நாடுகள் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்த ஆயத்தமாவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

ரஷ்யாவோ என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தனது பயணங்களை ஒத்தி வைத்துவிட்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட்ட மற்ற நாடுகளுடன் தாக்குதலுக்கு ஆதரவளிக்குமாறு பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் தமது பாதுகாப்பு செயலருடன் நாட்டிலேயே தங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் சிரிய அரசாங்கமோ வேதிப்பொருட்கள் தாக்குதல் நடத்தப்பட்டதை மறுத்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers