பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் சவுதி இளவரசர்: காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்
176Shares

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த வாரம் பிரான்ஸ் நாட்டிற்கு கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

32 வயதாகும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த ஜூன் மாதம் பழமை வாய்ந்த சவுதி ராஜ்ஜியத்தை தாராளமயமாக்கும் நோக்கில், பல மேற்கத்திய தலைநகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அதன் விளைவாக சவுதி அரேபியாவில் பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், கலாச்சாரம், சுற்றுலா, புதிய தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து கலந்துரையாட பிரான்ஸ் நாட்டிற்கு, அவர் அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்காக, அடுத்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முகமது பின் சல்மான் கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையே பிரான்ஸ் செல்லும் சல்மான், எங்கு தங்க உள்ளார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை மீட்க வேண்டும் என்ற பெயரில், சவுதி தலைமையிலான கூட்டணி கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து, ஈரானிய ஆதரவிலான ஷியைட் ஹூதி போராளிகளை எதிர்த்து ஏமன் நாட்டில் குண்டு வீசி வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை அழைத்த ஐ.நா சபை, சவுதி இளவரசர் உடனான பேச்சுவார்த்தையின் போது, ஏமன் நாட்டில் நடத்தும் போரினை நிறுத்துவது குறித்து சல்மானுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில், ஏமனில் நடைபெற்று வரும் போரானது, உலகின் மிக மோசமான உள்நாட்டுப் போராக ஐ.நா சபை அறிவித்துள்ளது. தற்போது 22.5 மில்லியன் ஏமன் மக்களுக்கு உதவி தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்